அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு விற்றதாக தாசில்தாரிடம் புகார்


அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு  விற்றதாக தாசில்தாரிடம் புகார்
x
திருப்பூர்


அவினாசி அருகே அய்யம்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை கிராம உதவியாளர் முறைகேடாக விற்றதாக தாசில்தாருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்து அந்த மனுவில் கூறியதாவது:-

அவினாசி தாலுகா அய்யம்பாளையம் கிராமத்தில் ஒரு இடத்தை முன்னாள் அய்யம்பாளையம் கிராம உதவியாளர் ஒருவர் முறைகேடாக அரசு நிலத்திற்கு ஆவணம் தயார் செய்து (போலி பத்திரம்) ஆவணங்களை தயார் படுத்தி கிரையம் செய்து உள்ளதாக தெரிகிறது. அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்று 1912 வருட அரசு ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது.

எனவே போலி பத்திர பதிவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பத்திர பதிவு ரத்து செய்வதுடன் குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story