அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் நேற்று 2-வதுநாள் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் நேற்று 2-வதுநாள் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
அவினாசி
அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் நேற்று 2-வதுநாள் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
அவினாசிலிங்கேசுவரர் கோவில்
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் லிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கொங்குநாட்டில் உள்ள ஏழு சிவ திருத்தலங்களில் முதன்மை பெற்ற திருத்தலம் அவினாசிலிங்கேசுவரர் கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை மாத தேேராட்ட திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொருநாளும் சுவாமி திருவீதி உலா நடந்தது.
விழாவின் சிகரம் தொடும் நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தி கோஷம் முழங்கினர். முதல் நாள் தேர் சிறிதுதூரம் நகர்த்தப்பட்டு வடக்கு ரத வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.
2-வது நாள் தேரோட்டம்
இதனைத் தொடர்ந்து 2-வதுநாள் தேரோட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு நடந்தது. தேர்த்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் வடம் பிடிக்கும்போது பெருங்கருணை நாயகி அவினாசி லிங்கேஸ்வரர்கருணையினால் காலை முதல் மாலை வரை வானில் கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து ரம்யமான சூழ்நிலை நிலவியது. இதனால் பக்தர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குளிர்ச்சியான சூழ்நிலையில் உற்சாத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதியாக வலம் வந்து மாலை 4 மணியளவில் நிலை சேர்ந்தது.
இன்று (வியாழக்கிழமை) அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை நிகழ்ச்சியும், 6-ந் தேதி தெப்பத்தேர்விழாவும். 7-ந் தேதி நடராசர் தரிசன நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகறது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு அவினாசிலிங்கேசுவரர் கோவில் வளாகத்தில் உள்ள கலை அரங்கில் கடந்த 25-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தினசரி மாலை 7 மணியளவில் ஆன்மிகச் சொற்பொழிவு, பாதநாட்டியம், நாட்டியாஞ்சலி, மணிவாசகர் அருள்நெறி, நாதஸ்வர இசை, பொம்மலாட்டம், வீனை இசை, பட்டிமன்றம், பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.