சாலையில் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்


சாலையில் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்
x
திருப்பூர்

சாலையில் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்

அவினாசி ஆட்டையாம்பாளையத்தில் இருந்து வேலாயுதம்பாளையத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஓரம் அடுத்தடுத்து வீடுகள் உள்ளன. இதில் மண்சுவரால் ஆன வீடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த மழையால் வீட்டின் மண்சுவர் நனைந்து பலம் இழந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து சாலையோரம் விழுந்தது. அப்போது ரோட்டில் வாகனம் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அந்த வீட்டில் குடியிருந்த 4 பேர் வேறு ஒரு அறையில் தூங்கியதால் உயிர் தப்பினர்.


Next Story