அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதுமான பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன விழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நேற்று நடந்தது. இதில் நடராஜர் சிவகாமி அம்மையாருக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, பால், தயிர், இளநீர், எலுமிச்சை, திருமஞ்சனம், உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் நடந்தது.
இதில் திருப்பூர், அன்னூர், ஊட்டி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், அவினாசி சுற்றுவட்டாரப்பகுதியிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story