ஏப்ரல் 21, 22-ந் தேதிகளில் பள்ளித் தேர்வுகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்


ஏப்ரல் 21, 22-ந் தேதிகளில் பள்ளித் தேர்வுகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ரமலான் பண்டிகையையொட்டி ஏப்ரல் 21, 22 -ந் தேதிகளில் பள்ளித் தேர்வுகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மயிலாடுதுறை

ரமலான் பண்டிகையையொட்டி ஏப்ரல் 21, 22 -ந் தேதிகளில் பள்ளித் தேர்வுகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

ரமலான் பண்டிகை

இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் பஹ்ருதீன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாசிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-. இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகைக்கு ஏப்ரல் 22- ந் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறை 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ந் தேதி தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த தேதியில் ரமலான் பண்டிகை வரக்கூடிய ஒரு சூழல் உள்ளது.

தேர்வுகளை தவிர்க்க வேண்டும்

ரமலான் பண்டிகை பிறை தென்படுவதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது. இதன்படி ஏப்ரல் மாதம் 21-ந் தேதி அல்லது 22-ந் தேதி ரமலான் பண்டிகை வர உள்ளது. பண்டிகை நாளில் தேர்வு இருப்பதால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இதன்மூலம் அவர்களின் மனநிலை பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

எனவே வருகிற ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த அம்மனுவில் தெரிவித்துள்ளார். இதேகோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் மனு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story