விபத்துகளை தடுக்க இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்
விபத்துகளை தடுக்க இரவுநேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
விபத்துகளை தடுக்க இரவுநேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
உலக காய தினம்
வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் உலக காய தின விழா நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி வரவேற்புரை ஆற்றினார். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சிங்காரவேலு, உலக காயத் தின விழா குறித்து பேசினார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன் சிறப்புரையாற்றினார். வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணைத் தலைவர் கமல் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும், மது அருந்திய பின் வாகனங்கள் ஓட்டுவதையும், செல்போன் பேசியபடி ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டும்
விபத்துகளை தடுக்க இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கடந்த ஓராண்டில் மட்டும் சாலை விபத்துக்குள்ளான சுமார் 1½ லட்சம் பேர் உயிரிழந்தனர். சுமார் 3½ லட்சம் பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகள் குறித்து மாணவிகளால் நாடகம் மூலம் விளக்கப்பட்டது. சாலை விபத்துக்கள் குறித்து 9499966178 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு வாலாஜா மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. முடிவில் டாக்டர் கீர்த்தி நன்றி கூறினார்.