செல்போன், இணையதளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்


செல்போன், இணையதளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
x

மாணவர்கள் அதிகநேரம் செல்போன், இணையதளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார்.

வேலூர்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மலர், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் சுசிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசுகையில், இன்றைய காலக்கட்டத்தில் செல்போன், இணையதள சேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

மாணவ-மாணவிகள் தங்களின் கல்வி தொடர்பான விஷயங்களுக்காக இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். பலர் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் செல்போனை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

அதிகநேரம் செல்போன், இணையதளம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.

மர்மநபர்கள் சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அதனை தவறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

எனவே இணையதளத்தை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் சசிகலா, சுமதி ஆகியோர் சமூக வலைதளங்களில் மர்மநபர்கள் எவ்வாறு மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பேராசிரியர்கள் தமிழ்செல்வம், மோகனா மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story