உணவு பாதுகாப்புத்துறைக்கு மத்திய அரசு விருது
திருப்பூர்
உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையகத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் ஆய்வு, மாதிரிகள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக 'ஈட் ரைட் சேலஞ்ச்' விருதுக்கு தேசிய அளவில் 75 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டமும் விருது மற்றும் பாராட்டு சான்று பெற தேர்வானது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் விருது மற்றும் பாராட்டு சான்றை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகையிடம் வழங்கி பாராட்டினார். பின்னர் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விருது மற்றும் சான்றை கொடுத்து வாழ்த்து பெற்றார்கள்.