ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா


ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
x

வேடசந்தூர், வடமதுரை, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

திண்டுக்கல்

வேடசந்தூர், வடமதுரை, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் கிங் டவுன் சங்கம் சார்பில் நடந்த இந்த விழாவுக்கு சங்க தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். ரெட்டியார்சத்திரம் வட்டார கல்வி அலுவலர் ஜோசப் குழந்தை ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 15 பேருக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பேசுகையில், மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுக்காக மாணவ-மாணவிகளை தயார்படுத்தும் மையம் ரோட்டரி சங்கம் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற தகுந்த ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றனர். இந்த நிகழ்ச்சியில் சங்க பட்டய தலைவர் கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story