ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு விருது


ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு விருது
x
தினத்தந்தி 8 Aug 2023 1:30 AM IST (Updated: 8 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜம்ரூத் பேகத்துக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல்

ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ஆத்தூர் ஊராட்சி, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்றது. அதாவது ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜல்ஜீவன் திட்டத்தில் தன்னிறைவு பெற்ற சிறந்த ஊராட்சியாக ஆத்தூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதற்காக ஊராட்சி மன்ற தலைவர் ஜம்ரூத் பேகத்துக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. வருகிற 15-ந்தேதி புதுடெல்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில், மத்திய அரசு சார்பில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் சாதனை படைத்ததையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜம்ரூத் பேகம், துணைத்தலைவர் சையது அபுதாகீர், தி.மு.க. நிர்வாகி ஹக்கீம், ஊராட்சி மன்ற செயலர் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் அமைச்சர் இ.பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் அமைச்சருக்கு மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியின்போது, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story