கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது
கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும் விழா, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி கலந்துகொண்டு விருது, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு தப்பாட்டம். கிராமிய கலை, நாடகம் மற்றும் தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் பா.ஹேமநாதன், கலைபண்பாட்டுத்துறை பணியாளர்கள், கிராம கலைஞர்கள், நாடக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.