நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது


நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது
x

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

விழாவில் மருத்துவ துறை, ஊரக வளர்ச்சி துறை, கல்வி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 238 பேருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

மேலும் 2019-20-ம் ஆண்டில் சிறந்த பள்ளியாக நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. அந்த பள்ளிக்கான விருதை தலைமை ஆசிரியர் கோ.மங்கையர்கரசியிடம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு வழங்கினர். இதனையொட்டி ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் கோமதி மற்றும் கிராமிய கல்வி குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story