தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு பரிசு


தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு பரிசு
x

தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கான பரிசை கலெக்டர் வழங்கினார்.

சிவகங்கை

தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கான பரிசை கலெக்டர் வழங்கினார்.

420 மனுக்கள் குவிந்தன

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 420 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

விவசாயிக்கு பரிசு

பின்னர் பல்வேறு துைறகளின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.1, லட்சத்து 59 ஆயிரத்து 739 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாவட்ட அளவில் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப்பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கான போட்டியில் தேர்வு செய்யப்பட்ட எஸ்.புதூர் தாலுகாவை சேர்ந்த விவசாயி நாகராஜனுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், காளையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ராமநாதனுக்கு 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், கல்லல் தாலுகாவை சேர்ந்த அருள்சாமிக்கு 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் கலெக்டர் வழங்கினார்.


Related Tags :
Next Story