ஜி.பி.பார்மசி கல்லூரிக்கு விருது


ஜி.பி.பார்மசி கல்லூரிக்கு விருது
x

திருப்பத்தூர் ஜி.பி.பார்மசி கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

வேலூரில் டாஸ்லிங் சார்பில் சிறந்த கல்லூரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தார் ஆகிய 4 மாவட்டங்களில் சிறந்த பார்மசி கல்லூரியாக திருப்பத்தூர் ஜி.பி.பார்மசி கல்லூரிக்கு கல்வி சேவைக்கான டாஸ்லிங் விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை கல்லுரியின் தாளாளர்ஜி பொன்னுசாமி மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் தீன்குமார் ஆகியோர் பெற்றுகொண்டனர். சிறந்த கல்லூரிக்கான விருது பெற்றமைக்கு கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் பாராட்டு தெரிவித்தார்.


Next Story