டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடத்தில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் டெங்கு எதிர்ப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார சுகாதார அலுவலர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சி வரவேற்றார். சரஸ்வதி பள்ளி தாளாளர் ரவீந்திரன், செயலாளர் விக்ரம்மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டெங்கு கொசு உருவாகும் காலநிலை உள்ளதால் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி டாக்டர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


Next Story