பரமத்தியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு


பரமத்தியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு
x

பரமத்தியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் போர்டு வரைந்தனர். இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், நடராஜன், மகளிர் திட்டம் ரேகா, பரமத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story