"தூய்மை இந்தியா" விழிப்புணர்வு பிரசாரம்


தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

"தூய்மை இந்தியா" விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் சார்பாக "தூய்மை இந்தியா" விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நாட்டு நல பணித்திட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். மேலும் இந்திரா நகர் பகுதியில் தூய்மை இந்தியா பிரசாரத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஒற்றுமை ஓட்டம் நிகழ்வு தேசிய மாணவர் படை மாணவர்களுடன் இணைந்து நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஒற்றுமை தினம் உறுதிமொழி வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை பொறுப்பு அதிகாரி காளிதாசன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர்முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story