சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 21 Nov 2022 12:30 AM IST (Updated: 21 Nov 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் உலக கழிவறை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை ஊராட்சி தலைவர் ரேவதி அய்யப்பன் தொடங்கி வைத்தார். கொடியாலத்தூர் நடுத்தெருவில் தொடங்கிய ஊர்வலம் தொடக்கப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தொடர்ந்து பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல், கழிவறையை தூய்மையாக பராமரித்தல் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் தெய்வானை‌, வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், ஊராட்சி செயலாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story