ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளியில்புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளியில்புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரத் துறை சார்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியில் இருந்து தொடங்கி இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பள்ளியை வந்து முடிந்தது. ஊர்வலத்தில் புகையிலை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தியபடி பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Next Story