சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு


சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு
x

அரக்கோணம் தனியார் பள்ளி பஸ்களில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு

ராணிப்பேட்டை

அரக்கோணம்

தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் இப்போட்டி குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடையே செஸ் போட்டிகள் நடத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ்களில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தம்பி என்கிற சின்னத்துடன் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள், 'நம்ம செஸ், நம்ம பெருமை' - 'இது நம்ம சென்னை, நம்ம செஸ்' - 'வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு' போன்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.


Next Story