சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு


சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 24 May 2023 2:45 AM IST (Updated: 24 May 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கூறியதாவது:-

செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டதால், இதை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. ஆன்லைன் மூலம் வேலை வாங்கி தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும் கூறி செயலிகள் மூலம் ஏமாற்றி வருகின்றனர். இதில் பெண்கள் அதிகமாக ஏமாந்து விடுகிறார்கள். வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி தகவல்களை, அதாவது வங்கிக் கணக்கு எண், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை போன், குறுஞ்செய்தி மூலம் கேட்காது. அதனால் யாராவது உங்களிடம் கேட்டால் அந்த விவரங்களை பகிர வேண்டாம். சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்களில் 99 சதவீதம் பேர், இதுகுறித்து புகார் தருவதில்லை. இதனால் குற்றவாளிகள் பயமில்லாமல் இருக்கின்றனர். எனவே, உங்களை யாராவது ஏமாற்றும் நோக்கத்துடன் அணுகினாலோ, ஏமாற்றினாலோ போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story