போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு


போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
x

வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ரெயில்வே ேபாலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ரெயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ரெயில்வே சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் சுப்பிரமணி மற்றும் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி பேசுகையில், ''போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் ஒரு எதிர்காலத்துக்கு நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய இளைஞர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து தமிழக அரசும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வரும் காலத்தில் போதைப் பொருள் இல்லா தமிழகமாக மாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் ரெயில்வே துறை காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் போதைப்பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கடைப்பிடித்து போதைப் பொருள் இல்லா தமிழகமாக உருவாக்க அனைவரும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்'' என்றார். இதனை அடுத்து கல்லூரி மாணவர்கள் மூலம் ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story