போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு


போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
x

ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சார்பில் ரெயில் பயணிகளுக்கும், ரெயில்வே பிளாட்பாரத்தில் உள்ள பயணிகளுக்கும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, புஷ்பா மற்றும் போலீசார் கலந்து கொண்டு ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக சுகாதார நலத்துறை டாக்டர் பசுபதி மற்றும் திருப்பத்தூரில் உள்ள பிரம்மகுமாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருட்களின் அபாயம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

அதேபோல் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவிகள் 70 பேர் மற்றும் திருப்பத்தூர் பிரம்மகுமாரிகள் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நின்ற ரெயில் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை இன்ஸ்பெக்டர் இளவரசி வழங்கினார்.

மேலும் போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து எலும்பு கூடு உடை அணிந்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்


Related Tags :
Next Story