பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு
x

ஆற்காட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆற்காடு நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடத்தில் விளக்கிப் பேசினார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story