வனத்தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு


வனத்தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே வனத்தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேனி

ஆண்டிப்பட்டி வனச்சரகம் மற்றும் தீயணைப்புத்துறை சார்பில், திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது, வனத்தீயினால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் அரசு செயல்படுத்தி வரும் வனத்தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை மூலம் விளக்கி கூறப்பட்டது. மேலும் வனத்தீ ஏற்படாமல் தடுப்பது எப்படி? வனப்பகுதியில் ஏற்படும் தீயினால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வனத்துறையினர் செயல்முறை விளக்கம் கொடுத்தனர். நிகழ்ச்சியில் திம்மரசநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story