சுற்றுலா பயணிகளுக்கு ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு


சுற்றுலா பயணிகளுக்கு ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு
x

சுற்றுலா பயணிகளுக்கு ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏலகிரிமலை போலீசார் மலை சாலையில் வாகனம் ஓட்டுவது குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் வார விடுமுறையான கடந்த இரண்டு நாட்களில் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலையில் அதிகளவில் குவிந்தனர். சுற்றுலாவிற்கு வந்தவர்களுக்கு ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார், ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் போதைப் பொருள் தடுப்பு, போக்சோ சட்டம், சைபர் குற்றங்கள், ஹெல்ப் லைன் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட காவல் உதவி செயலிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story