விருத்தாசலத்தில்அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி விருத்தாசலத்தில் நடந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் நகரில் உள்ள புதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன பேரணி நடந்தது. இதையொட்டி பள்ளி முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்ததுடன், மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
இந்த பிரசார வாகனத்துடன் பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதன் அவசியம் மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த பாடல்களை ஒலிபரப்பியபடி அரசின் நலத்திட்டங்கள், அரசு பள்ளிகளில் நடைபெறும் கற்றலில் புதுமைகள் குறித்த துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, விமலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில்குமார், தலைமை ஆசிரியை கமலாதேவி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், ஆசிரியர் பயிற்றுனர்கள் சரிதா, கவிதா, விஸ்வநாதன், சுரேஷ், நாராயணசாமி, சண்முகம் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.