கஞ்சாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு


கஞ்சாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூரில் கஞ்சாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

மஞ்சூர்,

மஞ்சூர் காவல்துறை சார்பில், கஞ்சாவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கிண்ணக்கொரை கிராமத்தில் நடைபெற்றது. பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கிண்ணக்கொரை ஊராட்சி துணை தலைவர் வீரமலை மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மஞ்சூரில் நடந்த நிகழ்ச்சியில் கஞ்சா பயன்பாடு இல்லாத கிராமமாக மாற்றுவோம் என்று பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் இன்ஸ்பெக்டர் கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தனபால் சம்பந்தம், வேல்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story