கோத்தகிரியில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு


கோத்தகிரியில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 11 May 2023 12:00 AM IST (Updated: 11 May 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மூலம் வருவதால், விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் சார்பில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி பங்கேற்று, போக்குவரத்து விதிகளை விளக்கிக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் இருவரும் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிதல், அதிவேகம் அதிக ஆபத்து உள்ளிட்ட வாசகங்களை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அலுவலர்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


Next Story