சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு


சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,


விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி அரசு மேல் நிலைப்பள்ளியில், சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் முன்னிலை வகித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சைபர் கிரைம் குறித்தும் அதில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது, முன்னெச்சரிக்கையாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார். மேலும், இதுபோன்ற குற்றங்கள் நடந்தால் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் போலீசார் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள், பள்ளி மாணவிகள், இளம் சிறார்கள் பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்படும் போது, 1098 என்ற எண்ணில் புகார் செய்யுங்கள் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story