பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்


பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
x

தர்மபுரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி கலைவாணி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் சந்தோஷ் வரவேற்றார். வக்கீல் ஆசியஜோதி, மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகி ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால் அதனை எதிர்கொள்வது குறித்தும், சட்ட விழிப்புணர்வு குறித்தும் விளக்கி பேசினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story