விழிப்புணர்வு முகாம்


விழிப்புணர்வு முகாம்
x

செங்கோட்டை நகராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் நகராட்சி சுகாதார துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடந்தது. முகாமிற்கு நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், மேலாளா் ரத்தினம், கணக்கா் கண்ணன், பொறியாளா் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி வரவேற்றார். மாவட்ட பூச்சியியல் வல்லுனா் குருநாதன், இளநிலை பூச்சியியல் வல்லுனா் பாலாஜி, வட்டார சுகாதார மேற்பார்வையாளா் கதிரவன் ஆகியோர் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு விளக்கவுரையாற்றினா். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், சுடர்ஒளி, மேரி அந்தோணிராஜ், வேம்புராஜ், செண்பகராஜன், நகராட்சி பணியாளா்கள், சுகாதார மேற்பார்வையாளா்கள் காளியப்பன், முத்துமாணிக்கம், துாய்மை இந்திய திட்டப்பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.


Next Story