சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்


சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மருதிபட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் ஆலோசனையின் பேரில் முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன், துணை தலைவர் கமலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார். சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆதித்யா, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சரவணன், சிங்கம்புணரி மருத்துவமனை சித்த மருத்துவர் ரஹீமா பானு ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் காய்ச்சல், பிசியோதெரபி, கண் பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் சோலைசாமி, சுகாதார ஆய்வாளர் எழில் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக சுகாதாரமான ஊராட்சியாக மாற்றுவதற்கு நோயற்ற வாழ்வு வாழ சித்த மருத்துவத்தின் மகத்துவம் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். முகாமில் 225 பேர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.


Next Story