விழிப்புணர்வு முகாம்
கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விருதுநகர்
ஆலங்குளம்,
வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கர் செவல் ஊராட்சி கே.லட்சுமியாபுரம் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ரகுராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் அரவிந்தன், கங்கர் செவல் ஊராட்சி தலைவர் கலா சந்திரசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பாக கால்நடை வளர்த்திருந்த பயனாளிகளுக்கு ரகுராமன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார். கால்நடைகளுக்கு குடற்புண்களுக்கு மருந்தும், ஊட்டசத்து பொருட்களும் வழங்கப்பட்டன. இதில் முத்துசாமிபுரம் ஊராட்சி தலைவர் நாகராஜ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் ரவிசங்கர், கே.லட்சுமியாபுரம் கிளை செயலாளர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story