'நம்ம ஊரு சூப்பரு' திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்


நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 4 Sept 2022 9:09 PM IST (Updated: 4 Sept 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

தே.சிந்தலைச்சேரி ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தேனி

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மொத்தம் 13 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சிறப்பு தூய்மைப் பணிகளும் நடந்து வருகிறது.இந்த நிலையில் தே.சிந்தலைச்சேரி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம் மூலம் அங்குள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடிகள், ஊராட்சி அலுவலகங்கள், தண்ணீர் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகாந்தன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி, ஊராட்சி செயலர் சிவசங்கர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Next Story