மின் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
திமிரியில் மின் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
திமிரியில் மின்சார ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆற்காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். திமிரி உதவி செயற்பொறியாளர் சாந்தி பூஷன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் சங்கர் கலந்து கொண்டு மின்சார வாரியத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் வேலையின் போது எவ்வாறு பாதுகாப்புடன் வேலை செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் ஆற்காடு தனலட்சுமி, மாம்பாக்கம் மெகபு உசேன், கலவை சித்ரா மற்றும் அனைத்து பிரிவு பொறியாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திமிரி கிழக்கு உதவி பொறியாளர் யுவராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story