தோட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்


தோட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தோட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நீலகிரி

பந்தலூர்,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின்படி, பந்தலூர் தாலுகா சேரம்பாடி காவல்துறை சார்பில், தோட்ட தொழிலாளர்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு முகாம் சோலாடியில் நடைபெற்றது. முகாமில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிக்கந்தர், முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசும்போது, கஞ்சா, புகையிலை பொருட்கள், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனால் போதைப்பொருள் கடத்தலை தடுக்க காவல்துறை மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறோம். எனவே, தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாராவது போதைப்பொருள் விற்பனை செய்தால், போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.


Next Story