கோத்தகிரியில் பழங்குடியின கைவினைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம்


கோத்தகிரியில் பழங்குடியின கைவினைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பழங்குடியின கைவினைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் உள்ள நீலகிரி ஆதிவாசிகள் நல சங்க அரங்கில் நடைபெற்ற தோடர், இருளர், கோத்தர், குரும்பர் ஆகிய பழங்குடியின கைவினை கலைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ரொனால்டு செல்விஸ்டின், ஊட்டியை சேர்ந்த தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் லெனின், தொழிலாளர் நல உதவி ஆணையர் கிருஷ்ணவேணி, அபிவிருத்தி ஆணைய ஆய்வாளர் (கைவினை பொருட்கள்) ஞான பண்டிதன் ஆகியோர் பங்கேற்று கைவினை கலைஞர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். மேலும் முகாமில் பங்கேற்ற பழங்குடியின கலைஞர்களுக்கு தொழிலாளர் நல வாரிய அட்டை வழங்குவதற்கான பதிவு நடைபெற்றது. இதில் 110 ஆதிவாசி கலைஞர்கள் தங்களைப் பதிவு செய்துக் கொண்டனர். ஏற்கனவே இந்த வாரியத்தில் 60 க்கும் மேற்பட்ட பயனாளிகள் அரசின் பயன்பாட்டில் வந்துள்ள நிலையில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று புதிய கைவினைஞர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக ஆதிவாசிகள் நல சங்க செயலாளர் ஆல்வாஸ் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி நன்றி கூறினார்.


Next Story