பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்


பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்
x

பந்தலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே பொன்னானி அரசு உண்டு உறைவிட பள்ளி சார்பில், பழங்குடியின மக்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் அம்பலபாடி கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சற்குண சீலன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் நாடகம் மூலம் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் பேசும்போது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி நன்றாக படிக்க வைத்து உயர் பதவிகளில் பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பழங்குடியின மக்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.



Next Story