பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்
கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு ஒருங்கிணைந்த சேவை, பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமண தடுப்பு சட்டம், ஊட்டச்சத்து குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி, பெண்கள் சேவை நிர்வாகி மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முகமது சாதிக் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் பேசுகையில் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் ஆங்கிலேயர் காலத்திலேயே இருந்துள்ளது.
அப்போது சிறிய வயதுள்ள பெண்களுக்கு திருமணம் செய்து விடுவார்கள் அவர்களே ஒரு குழந்தை அவர்களுக்கு ஒரு குழந்தை உருவாகிவிடும் இதனால் பெண்கள் மனநிலை பாதிக்கப்படுவார்கள்.
பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் நவதானிய பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் திருமணம் எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்த வேண்டும்.
பெண்களுக்கு எந்தவிதமான பிரச்சினை இருந்தாலும் அரசு அறிவித்துள்ள உதவி மைய போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மனநல அலுவலர் சுரேஷ் அண்ணா, சமூக நல அலுவலர் அருள்மொழி மற்றும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.