பெண்கள் மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு முகாம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ஜி.பி.பார்மசி கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் தீன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் தனலட்சுமி கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவிகளுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
அப்போது பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை 181 என்ற இலவச எண்ணில் எந்த நேரமும் தெரிவிக்கலாம் என பேசினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் சுசித்தா செல்வம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story