அம்பலமூலா அருகே மகளிர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
அம்பலமூலா அருகே மகளிர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அம்பலமூலா அருகே நரிகொல்லி பகுதியில் பொதுமக்களிடம் மகளிர்கள் நல திட்டங்கள் சுகாதாரம் மற்றும் மகளிர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையசெயலாளர் சிவசுப்பிரமணியம், நிர்வாகிகள் ரவீந்திரன் அஜித் ஆகியோர் மக்களுக்கு விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தனர். மகளிர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்கள், குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம், தையல் உதவி, கல்வி உதவி, மருத்துவஉதவி போன்றவை குறித்தும் உடல் நலன்சிகிச்சை முறைகள் குறித்தும், பெண்கள் உரிமைகள் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்கள், பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் ஆகியன குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story