விழிப்புணர்வு பிரசாரம்


விழிப்புணர்வு பிரசாரம்
x

தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. காரியாபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது? தீயை அணைக்க கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி செயல் விளக்கங்கள் செய்து காண்பித்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story