தமிழ் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
சிவகங்கை தமிழ் சங்கத்தின் சார்பாக வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை தமிழ் சங்கத்தின் சார்பாக வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை நகர் வர்த்தக சங்கத்தின் தலைவர் அறிவுத்திலகம் வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை வைப்பது குறித்து துண்டு பிரசுரம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ் சங்கத்தின் தலைவர் கண்ணப்பன், பொருளாளர் காசி ராமமூர்த்தி, நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் மற்றும் பகிரத நாச்சியப்பன் உள்பட வர்த்தக சங்க உறுப்பினர்கள், தமிழ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழில் பெயர் பலகை வைத்துள்ள கடை உரிமையாளர்களுக்கு தமிழ் சங்கம் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story