மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம்


மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம்
x

மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம்

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி அம்மன்கோவில்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் திலக ராணிவரதராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது தெரியாத நபர்களுக்கு கொடுக்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட கூடாது. அவர்கள் தனியாக அழைத்தால் செல்ல கூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களும், 23 வயதுக்கு கீழ் உள்ள ஆண்களும் திருமணம் செய்து கொள்ள கூடாது. குழந்தை திருமணம் நடைபெற்றால் 1098, 181, 100 என்ற இலவச எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். தெரியாத நபர்களில் இருந்து செல்போன் அழைப்பு வந்தால் அது குறித்து வீட்டில் உள்ள பெரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோகால் அழைப்புகளை பேச கூடாது. சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் அதில் போட்டோக்களை பதிவிட கூடாது. இவ்வாறு அவர் பேசினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுஜோதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story