பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க விழிப்புணர்வு பிரசாரம்


பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க விழிப்புணர்வு பிரசாரம்
x

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க விழிப்புணர்வு பிரசாரம்

விருதுநகர்

சிவகாசி

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்று துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சிவகாசி அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுசெயலாளர் இளங்கோவன், தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன், போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


Next Story