குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற விழிப்பணர்வு பிரசாரம்


குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற விழிப்பணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரத்தில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற விழிப்பணர்வு பிரசாரம் நடந்தது.

தேனி

பள்ளிக்கல்வி துறை சார்பில், குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம், எதிர்காலத்தை பலமாக்குவோம் என்ற வாகன விழிப்புணர்வு பிரசாரம் மாநிலம் முழுவதும் கடந்த 17-ந்தேதி முதல் நடந்து வருகிறது. அதன்படி, தேனி மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பிலும், வாகன விழிப்புணா்வு பிரசாரம் தேனி அல்லிநகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் தலைமை தாங்கினார்.

மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி முன்னிலை வகித்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். அரசு பள்ளியில் தொடங்கிய இந்த பிரசார வாகனம் பல்வேறு பகுதிகள் வழியாக சென்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். பிரசாரத்தின்போது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம், எதிர்காலத்தை பலமாக்குவோம் என்று கோஷமிட்டபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பிரசாரம் வருகிற 29-ந்தேதி வரை நடைபெறுகிறது.


Related Tags :
Next Story