கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
உலக விலங்கின நோய்கள் தினத்தையொட்டி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திண்டுக்கல்
உலக விலங்கின நோய்கள் தினத்தையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல் கால்நடை மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதற்கு சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் தலைமை தாங்கினார். பூச்சியியல் வல்லுனர் தெய்வேந்திரன், கால்நடைத்துறை துணை இயக்குனர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கால்நடைகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்தும், அவற்றை தடுக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதையடுத்து மாணவ-மாணவிகள், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உலக விலங்கின நோய்கள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story