வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு


வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு குறித்து வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹாிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் அந்தந்த போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை போலீசார் நேரில் சந்தித்து சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி குறித்தும் மற்றும் அவர்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், "வட மாநிலத் தொழிலாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. குமரி மாவட்டத்தை பொறுத்த வரை பாதுகாப்புக்காக போலீசார் எந்த நேரத்திலும் வருவார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வர அச்சப்படத் தேவையில்லை. பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை கையாண்டு பணிபுரிய வேண்டும்" என்றனா்.


Next Story