மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் படிக்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு


மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் படிக்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு
x

ஜவ்வாதுமலையில் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் படிக்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

திருவண்ணாமலை

ஜவ்வாதுமலையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 10 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மலை பகுதியில் வசிக்கும் மாணவர்களில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளி இடைநிற்றல் அதிகளவில் காணப்படும்.

அதனால் பள்ளி மாணவ, மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில் வனத்துறை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் ஜமுனாமரத்தூர் வனச்சரகர் குணசேகரன், வனவர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்பட ஆசிரியர்கள், வனத்துறையினர் ஈடுபட்டனர்.

குறிப்பாக மாணவ, மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயிலும் வகையில் 5-ம் வகுப்பில் இருந்து 6-ம் வகுப்பு, 8-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பிலிருந்து 11-ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக இடைநிற்றல் ஏதுமின்றி மாணவர்கள் பள்ளிப்படிப்பை தொடர்ந்து உள்ளார்கள் என்றும், இது போன்ற நடவடிக்கைகள் இனி வரும் காலங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story